அல்லைப்பிட்டியில் நேற்று முன்தினம் இரவு விஷமிகள் இரண்டாவது முறையாகவும் மூட்டியுள்ளார்கள்.வேலணை பிரதேச சபையும்-யாழ் மாநகரசபையின் தீ அணைப்பு பிரிவின் முயற்சியால் தீ மற்றைய இடங்களுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீயினால் மீண்டும் அதிகளவான பனைகள் தென்னைகள் தீயில் கருகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு வாரத்திற்குள் இரண்டாவது தடவையாக தீ வைப்புச் சம்பவம் இடம் பெற்று இருப்பதனால்-வேண்டுமென்றே விஷமிகள் தீ வைக்கின்றார்கள் என்று அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வியாழன் இரவு மூட்டப்பட்ட தீயினை கட்டுப்படுத்த சற்றுத் தாமதித்து இருந்தால் அருகிலிருந்த பல வீடுகள் எரிந்து நாசமாகியிருக்கும் என்று அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் இந்த தீ வைப்புக்கான சரியான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.