அரியாலை பூம்புகாரை தத்தெடுத்தது யாழ்.றோட்டரி

யாழ்ப்பாண றோட்டரிக் கழகம் அரியாலை பூம்புகார் கிராமத்தை தத்தெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக சண்முகா சிறுவர் முன்பள்ளி சிறார்களுக்கு அமரர் செல்லையா சிவபாதம் சுந்தரம் நினைவாக கல்வி கற்கும் தளபாடங்கள் கையளிக்கப்பட்டன.

நேற்று மாலை 5மணியளவில் யாழ்.றோட்டரிக் கழக முன்னாள் தலைவரும்,யாழ்.மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினருமான ஈ.சரவணபவன் தலைமையில் யாழ்.றோட்டரி கழக உறுப்பினர்களும் இணைந்து குறித்த தளபாடங்களை கையளித்தனர்.

இந்த நிகழ்வில் அரியாலை பூம்புகார் கிராம அலுவலர் மற்றும் யாழ்.றோட்டரி கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.