அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவது தொடர்பில் அவதானம்!

அரச ஊழியர்களுக்கு தனியார் துறையில் பணி புரிவதற்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய இவ்வாறு தனியார் துறையில் பணி புரிய விரும்பும் அரச ஊழியர்களுக்கு 5 வருட விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக 7 பேர் கொண்ட குழு
நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.