Ad Widget

அரச ஊழியர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்

அமெரிக்க டொலரின் ஒப்பீட்டளவிலான ரூபாயின் மதிப்பு தற்போது 146 ஆக காணப்படுவதாகவும், 1976ம் ஆண்டுக்குப் பின்னர், ரூபாயின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைவது, இதுவே முதல் முறை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் அரசியல்வாதிகள், விளையாட்டு துறையினர், கலைஞர்கள் போன்றோரை, எப்.சீ.ஐ.டிக்கு அழைத்து நாட்டின் பிரதி விண்பத்தை சேதப்படுத்தியுள்ளதாகவும் பந்துல குணவர்த்தன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதனால் முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வர முடியாது போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச ஊழியர்களின் சம்பளத்தில் அதிகரிப்பதாக கூறப்பட்ட 2500 ரூபாய் இம் மாத சம்பளத்தில் சேர்க்கப்படவில்லை என, இதன்போது சுட்டிக்காட்டிய அவர், இதன்படி அரச ஊழியர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த சம்பள அதிகரிப்பு குறித்து ஆராயுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதகாவும் பந்துல குணவர்த்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts