நில அபகரிப்பு,கடல் ஆக்கிரமிப்பு,திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என்பவற்றைக் கண்டித்து முல்லைத்தீவில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.
முல்லைத்தீவு மாவட்ட சமூக அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மக்களின் இந்த உரிமைப்போராட்டத்துக்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பு தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு பிரஜைகள் குழுவின் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கொக்கிளாய் பங்குத் தந்தை,தமி்ழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வினோநோகராதலிங்கம்,சிவசக்தி ஆனந்தன்,செல்வம் அடைக்கல நாதன்,தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை குழப்பும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது..