அரசியல் செல்வாக்குகள் காரணமாக தொண்டர் ஆசிரியர் தொகை அதிகரிப்பு!! பட்டதாரிகள் அதிர்ச்சி

பட்டதாரிகளிற்கு நிமயனம் வழங்கப்போவதாக மத்திய, மாகாண அரசுகள் அறிவித்தல் விடுத்துள்ளமையானது மகிழ்ச்சியளிக்கின்ற விடையமாக இருக்கின்றபோதிலும் தொண்டராசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்போவதாக அரசு அறிவித்துள்ள பின்னணியில் அரசியல் செல்வாக்குகள் காரணமாக தொண்டர் ஆசிரியர்கள் தொகை திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளமையானது தகுதிவாய்ந்த பட்டதாரிகளின் நியமனங்களி்ல் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் இச் செயற்பாடானது கல்விமட்ட அடைவுகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் எனவும் வடக்கு மாகாண பட்டதாரிகள் சமூசம் கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் ஒன்றுகூடலை நடாத்திய பட்டதாரிகள் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அவ் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.,

ஊடக அறிக்கையின் முழு வடிவம் ….