அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சொல்வது பொய்! : மகிந்த ஹத்துருசிங்க

mahinda_hathurusingheஅரசியல்வாதிகளும் ஊடகங்களும் பேசுவதெல்லாம் பொய். நாம் சொல்வதே உண்மை. நாம் சொல்வதையே மக்கள் நம்பவேண்டும் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் வலி.வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினரின் பாவனைக்கென நிரந்தரமாக சுவீகரிப்பது தொடர்பாக காணி அமைச்சர் தலைமையில் உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதில் மகிந்த ஹத்துருசிங்கவும் கலந்து கொண்டார். இதன்போது கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அரசியல்வாதிகள் பொய் பேசி மக்களைக் குழப்பி வருகின்றனர். ஊடகங்களும் உண்மையை மக்களுக்குச் சொல்வதில்லை.

அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் பொய்களை மக்கள் நம்பக்கூடாது. நாம் சொல்வது மட்டுமே உண்மை. அதனையே மக்கள் நம்ப வேண்டும் எனவும் மகிந்த ஹத்துருசிங்க இங்கு தெரிவித்தார்.