அமைச்சர் ராஜித சேனாரட்ன யாழிற்கு விஜயம்

rajitha-senaratneநீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொள்வுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சரின் யாழ். விஜயத்தின் போது, யாழ். பாசையூர் இறங்குதுறையினை மற்றும் சுழிபுரம் இறங்குதுறை என்பவற்றினை திறந்து வைக்கவுள்ளதாக அவ்வட்டாரங்கள் கூறின.

இதில் பாசையூர் இறங்குறை ஜ.ஓ.எம். நிறுவனத்தினால் சுமார் 60 மில்லியன் ரூபாவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதுடன், சுழிபுரம் இறங்குதுறை கடற்றொழில் அமைச்சின் 12மில்லியன் ரூபாவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.