அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்க்கு வைத்தியசாலையில் சிகிச்சை

daklasபாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உயர் இரத்த அழுத்தம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு மணியளவில் திடீரென்று ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் இவர் சிசிச்சை பெற்றுள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து அலுவலகத்திற்கு இவர் சென்றுவிட்டதாகவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமல் (கமலேந்திரன் ) கூறினார்.