Ad Widget

அமெரிக்க இராஜாங்க திணைக்கள துணைச்செயலாளர் இலங்கை விஜயம்

அமெரிக்க இராஜாங்க திணைக்கள துணைச்செயலாளர் தோமஸ் சானொன் இன்று (14) இலங்கை வரவுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் அவர் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவருடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலாளர் மான்பிரீத் சிங் ஆனந்தும் வரவுள்ளார் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

தோமஸ் சானொன் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து யுஎஸ்எயிட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதார திட்டங்களை நேரில் பார்வையிடவுள்ளார் என்றும் அரச மற்றும் பாராளுமன்ற உயரதிகாரிகள், சிவில் சமூக சிரேஷ்ட தலைவர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts