யாழ். மாவட்ட செயலகத்திற்கு மூவினங்களையும் சேர்ந்த 44 முகாமைத்துவ உதவியாளர்கள் நியமனம்

dak-suntharam-arumainayagam-GAயாழ்.மாவட்ட செயலகத்திற்கு மூவினங்களையும் சேர்ந்த 44 முகாமைத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று தெரிவித்தார்.

மத்திய அரசினால் நியமனம் வழங்கப்பட்ட நிலையில், இந்த 44 முகாமைத்துவ உதவியாளர்களும் இன்று முதல் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

அரச கொள்கைகளுக்கு இணங்க மொழி மற்றும் சமூகக் கட்டமைப்பினை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தென் மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முகாமைத்துவ உதவியாளர்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.