Ad Widget

அப்பாவை விடுதலை செய்யுங்கள்:ஜனாதிபதியிடம் கோரிக்கை

‘எங்கள் அப்பாவை கட்டியணைக்க ஆசையாகவுள்ளது, ஜனாதிபதி மாமா, எங்கள் அப்பாவை விடுதலை செய்யுங்கள்’ என்ற கோஷத்துடன், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பிள்ளைகள், யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (30) பேரணியொன்றை நடத்தினர்.

missing-pepople-cv-1

யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பமாகிய இந்தப் பேரணி, முதலமைச்சர் அலுவலகம் வரைச் சென்றது. அதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு கோரி மகஜர் ஒன்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

இந்தப் பேரணியை வாழ்வின் ஒளியைத் தேடும் சிறுவர்களுக்கான ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

அப்பாவை பார்க்க ஆசையாக உள்ளது:அரசியல் கைதியின் மகள்

missing-pepople-cv-2

‘விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் எனது அப்பாவை கைது செய்யும் போது, எனக்கு ஒரு வயது என்று அம்மா சொல்லுவார். எனக்கு தற்போது 8 வயாதாகின்றது. இன்னமும் எனது அப்பாவை விடுதலை செய்யவில்லை’ என அரசியல் கைதியொருவரின் மகள், கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

பேரணியில் கலந்துகொண்ட மகேந்திரன் ரஜிதா என்ற சிறுமியே இவ்வாறு கூறினார்.

‘எனது அப்பாவை கட்டியணைப்பதற்கு ஆசையாகவுள்ளது. நான் அப்பாவை பார்க்க வேண்டும், அப்பா என்கூடவே இருக்க வேண்டும். அப்பாவை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மாமா ஏற்பாடு செய்ய வேண்டும்’ என அந்தப் சிறுமி கண்ணீர் மல்கக் கூறினார்.

Related Posts