அன்று ஜே.ஆர். சொன்னதை இன்று மஹிந்த நிறைவேற்றுகிறார்

ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதை தவிர மற்ற எல்லா விடயத்தையும் செய்வேன் என முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன சொல்லி இருந்தார். அன்று ஜே.ஆர்சொன்னதனையே இன்று மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், நேற்று(12) தெரிவித்தார்.

p-kajatheepan

இராணுவ அடக்கு முறைக்கு மத்தியில் அடுத்ததாக என்ன செய்யப்போகிறோம் என தெரியாத அளவுக்கு நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வன்னியசிங்கத்தின் நினைவுதினம், யாழ்., நீர்வேலி வாழைக்குலை சங்க மண்டபத்தில்இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கஜதீபன் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் காரணமாக வெளிநாடுகளிலுள்ள எமது உறவுகள் நாடு திரும்புவது தடுக்கப்படுகின்றது.

பாரிய இராணு நடவடிக்கை போன்று,என்று மில்லாதவாறு இராணுவத்தினர் கனரக வாகனங்களில் இங்கு நடமாடுகின்றனர்.

நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டது என்று சொல்லப்படுகின்ற இந்தகாலகட்டத்தில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தவண்ணம் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வளவு இராணுவ நெருக்குதலுக்கு மத்தியில் எங்களுக்கு இருக்ககூடிய ஒரே சொத்து இந்த மக்கள். மக்கள் தற்போதுவிடுதலை பெருமூச்சுடன் இருக்கிறார்கள்.

தமிழ் தேசியத்தின் பால்வைத்திருக்ககூடிய நம்பிக்கை, விசுவாசம் என்பவற்றை இறுக்கமாக பற்றி வைத்திருக்கின்றார்கள்.

ஆனால்,இதை வைத்துக் கொண்டு அடுத்தகட்டத்தை எப்படி நடத்தப்போகிறோம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என அவர் மேலும் கூறினார்.