அனைத்தையும் மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது: ராஜித

யுத்தத்தின்போது இடம்பெற்ற அனைத்து சம்பவங்களையும் மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, பிறேஸிலில் இலங்கைக்கான தூதுவராக பணியாற்றும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராஜித சேனாரத்ன, “இராணுவ தரலவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்றால் சரியான தகவல்களை முன்வைக்க வேண்டும். யுத்தத்தின்போது இடம்பெற்ற அனைத்து சம்பவங்களையும் மனித உரிமை மீறல்களாக சிலர் கூறுகின்றனர். எனினும் எல்லாவற்றையும் அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. குறித்த காலப்பகுதியில் நடைபெற்ற காணாமல் போக செய்யப்பட்ட சம்பவங்கள், கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான சம்பங்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது’ என்று பதிலளித்துள்ளார்.

Related Posts