Ad Widget

அநு­ரா­த­புரம் சிறைக்கு த.தே.கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குழு­ இன்று விஜயம்

தமக்கு பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­யப்­பட வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்தி தமிழ் அர­சியல் கைதிகள் உண்­ணா­வி­ர­தப் ­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் இன்றைய தினம் நண்­ப­க­ல­ளவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குழு­வொன்று விஜயம் செய்­ய­வுள்­ளது.

பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதி தலை­வரும் வன்­னி­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன், கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுக்­களின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் உள்­ளிட்ட குழு­வி­னரே இவ்­வாறு விஜயம் செய்­ய­வுள்­ளனர்.

கைதி­களின் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் இன்று மூன்­றா­வது நாளா­கவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யி­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் விஜயம் செய்­ய­வுள்­ளனர்.

அனுரா­த­புர சிறைச்சாலையில் 35 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts