அத்தியாவசிய சேவைகள், தொழில் நடவடிக்கைகள் சிலவற்றுக்கு பயணத்தடை காலத்தில் அனுமதி

பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் உள்பட பல சேவைகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அதன்படி, ஆடைத் தொழிற்சாலைகள், கட்டுமானத் தொழில், இயற்கை உர உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகள் ஆகியவை சுகாதார பரிந்துரைகளின் கீழ் அனுமதிக்கப்படுகின்றன.

வங்கி மற்றும் பொருளாதார மையங்களின் இயங்குவதற்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor