அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் – GMOA எச்சரிக்கை

கொரோனா தொற்று தொடர்பாக உரிய அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைரஸ் அபாயத்தில் உள்ள மாவட்டங்கள் குறித்து அதிகாரிகள் இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டினார்.

அத்தோடு அதிகாரிகள் எடுக்கும் சில முடிவுகள் மக்களுக்கு தவறான சமிக்ஞைகளை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள பேருவாலை மற்றும் களுத்துறை பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் நடவடிக்கை குறித்தும் வைத்தியர் ஹரித அளுத்கே அதிருப்தி வெளியிட்டார்.

Recommended For You

About the Author: Editor