அதிகரித்து வரும் வலி நிவாரணி பாவனை உயிருக்கு ஆபத்தானது: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Close-up of tablets spilling out of an open bottleஇளைஞர்களிடையே அதிகரித்து வரும் வலி நிவாரணி மற்றும் இருமல் மருந்து பாவனை அதிக இறப்புக்களுக்கு காரணமாகின்றது என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

வலி நிவாரணி , இருமல் மருந்து அல்லது விற்றமின் மாத்திரைகள் அதிகமாக உள்ளெடுக்கும் போது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். நாம் எப்போதும் பயன்படுத்தும் பரசிட்டமோல் (paracetamol) அல்லது அஸ்பிரின் போன்றவை அதிகமாக உள்ளெடுப்பதால் போதை ஏற்படுவதோடு, உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுதுகிறது.

அதிகரித்து வரும் தற்கொலைகளைக் குறைத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 24 மணி நேர தொலைபேசி இலக்கம் 2686143 ஐ தொடர்பு கொள்ளலாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருந்தக உரிமையாளர்களுக்கு மருந்து சிட்டை இன்றி மருந்து வழங்க வேண்டாம் என்றும் சட்டவிரோத மருந்து விற்பனை பற்றி அறிந்தால்அது தொடர்பாக சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பிராந்திய பணிப்பாளரைத் தொடர்பு கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.