அதிகரித்தது பால் மாவின் விலை

powder-milkநாட்டில் 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமையும் டொலரின் பெறுமதிக்கேற்ப ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையுமே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் பால்மா உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தற்போதைய சந்தைப் பெறுமதிக்கு பால்மாவை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பில் பால் மா உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.