அணுத் தொழில்நுட்பம் தொடர்பில் ரஸ்யாவுடன் இலங்கை உடன்படிக்கை

Flag-Pins-Russia-Sri-Lankaஅணுச் சக்தி தொழில்நுட்பம் தொடர்பில் இலங்கை ரஸ்யாவுடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளது.

அணுசக்தி தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ரஸ்ய அணுச்சக்தி முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், முன்னாள் ஜனாதிபதி சர்ஜீ திரியான்கோவிற்கும், இலங்கை அணுசக்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தனவிற்கும் இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அணுச்சக்தி ஆய்வு, அணுக்கழிவு முகாமைத்துவம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு எதிர்காலத்தில் அணுச் சக்தியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.