அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மல்லாகம் நலன்புரி நிலைய மக்கள்!

mallakam_campமல்லாகம் கோணப்புலம் பகுதியில் அமைந்துள்ள நலன்புரி நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்த நலன்புரி நிலையத்தில் 300 மேற்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குடிநீர் கிணறு மற்றும் மலசல கூடம் போன்றன பழுதடைந்துள்ள நிலையில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நலன்புரி நிலையத்தை திருத்தி அமைக்கவென அரசாங்கம் 2, 31000 நிதிநினை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பிரதேச ஒருகிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த நலன்புரி நிலையம் திருத்தி அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை எவ்விதமான திருத்த வேலைகளும் இடம்பெறவில்லை நலன்புரி நிலையத்தில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.