அச்சுவேலி பகுதியில் சைக்கிள் திருட்டு அதிகரிப்பு

Cycleஅச்சுவேலிப் பிரசேத்தில் கடந்த பல மாதங்களாக சைக்கிள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் கடமையில் உள்ள பொலிஸார் இதனைக் கண்டு கொள்வது இல்லை என அப்பிரதேச வாசிகள் குறிப்பிடுகின்றனர்.

தூர இடங்களில் இருந்து சைக்கிளில் வந்து அச்சுவேலி நகர்ப் பகுதியில் உள்ள வீடுகளில் நிறுத்தி விட்டுச் செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச தனியார் துறைகளில் பணிபுரிவோரின் சைக்கிள்களே இவ்வாறு திருடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சைக்கிள் பூட்டிய நிலையில் உள்ள போதும் பூட்டை உடைத்துக் கொண்டு திருடர்கள் தமது கை வரிசையைக் காட்டிச் செல்கின்றனர். இதனால் பாடசாலை மாணவர்களும் ஏனையோரும் பல்வேறு சிக்கல் நிலையை எதிர் நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.