அங்கஜனின் தந்தை 14 நாள் விளக்கமறியலில்! சர்வானந்தனையும் விசாரிக்க உத்தரவு!

சாவகச்சேரி பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் சர்வானந்தனின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் எதிரொலியாக கைது செய்யப்பட்ட இதேகட்சி வேட்பாளர் அங்கஜனின் தந்தை இராமநாதன் 14 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி நீதிமன்றத்தால் இன்று இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலை முயற்சி என்ற காரணத்தினால் அவரது பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் சக வேட்பாளர் சர்வாதனிடமும் அங்கஜன் மீது மேற்கொள்ளப்பட்ட சூட்டுச்சம்பவம் குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த முறுகல் நிலை ஆளுக்கட்சிக்கு ஒருவிதத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி

அங்கஜயனின் தந்தை பொலிஸாரால் கைது