Ad Widget

ஆட்சியில் உள்ளவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை – சி.வி. விக்னேஸ்வரன்

யுத்தத்தால் ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யவே அரசாங்கம் வடக்கு, கிழக்கில் கம்பெரலிய திட்டத்தை நடைமுறைப்படத்தி வருவதாக முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை, அராலி மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆட்சியில் உள்ளவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் தலைமைகள் சலுகைகளை எதிர்பார்த்து நிபந்தனைகள் எதுவுமற்ற ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்கி அதன் இருப்பை உறுதிப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் வட மாகாண சபையின் முதல்வராக இருந்த போது, ஒரு சதம் காசைக் கூட மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது அரசியற் பிரவேசம் சுயநலம் கருதியது அல்ல எனவும் மாறாக நீதியின்பால், நேர்வழி நின்று, மக்கள் சேவை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது கொள்கையுடன் ஒத்து செயற்படக் கூடியவர்களை மாத்திரம் இணைத்துக் கொண்டு பயணிப்பதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts