Ad Widget

முகாம்களில் எலும்புக்கூடுகள் காணப்படுவதாக காணாமல்போனோரின் உறவுகள் சந்தேகம்

யுத்த காலத்தின்போது மன்னாரில் விசாரணைகள் இடம்பெற்ற முகாம்களில் எலும்புக்கூடுகள் காணப்படலாம் என்று சந்தேகம் வெளியிட்ட காணாமலாக்கப்பட்டோரின் மன்னார் மாவட்ட சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா, இதன் காரணமாகவே முகாம்களை நிரந்தரமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் கடற்படை மற்றும் இராணுவம் இன்னும் மக்களுடைய காணிகளிலும் அதே நேரத்தில் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் பாரிய முகாம்களை தற்காலிகமாக அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பல இராணுவ, கடற்படை முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் அந்த முகாம்களை நிரந்தரமாக்கிவிட்டார்கள் என்றால் முகாம்களுக்குள் இருந்து எத்தனையோ ஆயிரம் எலும்புகூடுகள் வரப்போகின்றன.

அதனாலே மறைமுகமாக அந்த காணிகளை தங்களே கையால வேண்டும் என தெரிவிக்கின்றனர். எனவே ஒரு போதும் இந்த காணிகளை நிரந்தரமாக வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.

Related Posts