Ad Widget

மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கான ஒரு எச்சரிக்கையா? – நாடாளுமன்றில் கூட்டமைப்பு!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கான ஒரு எச்சரிக்கையா என சந்தேகம் எழுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சபாநாயகர் தலைமையில் நேற்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் பத்திரிகையாளரின் மீதான தாக்குதலுக்கு கடுமையாக கண்டனத்தை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவருக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவேப்புலம் வீதியில், வீடொன்றின் மீது இனந்தெரியாத குழுவினரால் நேற்று (செவ்வாய்கிழமை) பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த சம்பவத்தை காணொளிப் பதிவு செய்யவேண்டாமெனத் தெரிவித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை, பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts