திருமண வைபவத்தில் கத்திக்குத்து! இருவர் படுகாயம்!

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றின் போது ஏற்பட்ட கைகலப்பு பாரதூரமாக சென்ற நிலையில், அதில் சம்பந்தப்பட்டவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவத்தில் அந்த பகுதியை சேர்ந்த அந்தோனிமுத்து, அவருடைய மகன் அமல்ராஜ் ஆகியோர் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்தனர்.

வடமராட்சியில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது மாலை வேளை மதுபோதையில் இருவர் முரண்பட்டு கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன்போது ஒருவர் மற்றொருவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் அன்றைய தினம் நள்ளிரவு, தன்னை தாக்கியவரின் வீட்டுக்குள் புகுந்து தன் மீது தாக்குதல் நடத்தியவரையும், அவருடைய மகனையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான இருவரும் சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts