நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று நல்லூர் பிரதேச சபையின் இன்றைய அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பசு வதையினைத் தடுக்கும் பொருட்டும், சைவ சமய விழுமியங்களைப் பேணும் முகமாவும் சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகள் தடைசெய்யப்பட வேண்டும்.
அத்துடன் சபையினால் குத்தகைக்கு விடப்படும் மாட்டிறைச்சிக் கடைகள் இனி குத்தகைக்கு விடப்படாது தடுக்கப்பட வேண்டும் என்ற வகையிலான தீர்மான வரைபை உறுப்பினர் கு.மதுசுதன் இன்று அமர்வில் முன்வைத்தார்.
அதற்கமைவாக தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.