வன்முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

யாழ் குடாநாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் போதைவஸ்து மற்றும் கலாச்சார சீரழிவுகளை எதிர்காலத்தில் அதிகரிக்காது வண்ணம் பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயும் விசேட கூட்டங்கள் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.

சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் மாலை வரை கூட்டங்கள் நடைபெற்றன.

சந்தித்து குடாநாட்டின் வன்முறைகள் மற்றும் போதைவஸ்துபாவனை அதிகரித்துள்ளமைக்கான காரணங்கள் தொடர்பில் விரிவாக ஆளுநர் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து பழக்கங்களை கட்டுப்படுத்த வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும், மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கான காரணங்கள் அதனை இல்லாமல் செய்வதற்கு வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் கலந்தாலோசித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் பாதுகாப்பு தரப்பினருடனான விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

Related Posts