அரசியல் தீர்வை வேகமாக பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

அரசியல் தீர்வை எவ்வளவு வேகமாக பெற்றுத் கொடுக்க முடியுமோ எவ்வளவு வேகமாக பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரம் ஒரு கேள்விக்கு பதிலளித்து முதலமைச்சர் விடுத்துள்ள மின்னஞ்சலில் வடக்கு முதலமைச்சர் இதனை கூறியுள்ளார்.

உடனே அரசியல் தீர்வு அவசியம் என்று கூறிய தனது வாசகம், சம்பந்தன் இந்த வருட முடிவுக்கு முன்னர் அரசியல் தீர்வு என கூறியதன் பிரதிபலிப்பு எனவும் முதலமைசர் தெரிவித்துள்ளார்.

டெனீஸ்வரனின் பதவி நீக்கம் பற்றி அப்பொழுதிருந்து வலுவேற்கும் விதத்தில் வர்த்தமானியில் பிரசுரிப்பதே தீர்வு எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால் அதனை ஆளுநர் செய்கின்றார் இல்லை என தெரிவித்துள்ள முதலமைச்சர், ஏதோ காரணத்திற்கு மேற் கூறப்பட்டவாறு பிரசுரிக்க அவர் தயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தயங்காது வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு உடனே நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts