வடக்கு முதல்வர் இரட்டை வேடம் போடுவதாக ஜே.வி.பி குற்றச்சாட்டு

வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெற்கில் ஒரு முகத்தையும், வடக்கில் இன்னொரு முகத்தையும் காட்டி இரட்டை வேடம் போடுவதாக, மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

தெற்கில் சிங்களவர்களுடன் சிநேகிதம் கொண்டு, அவர்களை உறவுக்காரர்களாக்கியுள்ள விக்னேஸ்வரன், வடக்கில் சிங்களவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என நாடாகமாடுவதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ். பொதுநூலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் மேற்கண்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஊழல் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்து நல்லாட்சி என்று கூறிக்கொள்வோர், கடந்த மூன்றரை வருடங்களில் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் செயற்பாடுகளையே மேற்கொண்டிருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Posts