சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலைக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மலரஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான குருதி சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், சுகாதார அமைச்சருடன், பிரதி சுகாதார அமைச்சர், வட மாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன், எம்.கே.சிவாஜிலிங்கம் நகரசபை தவிசாளர் சிவமங்கை, பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.