யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திவரும் குள்ள மனிதர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பில் உடடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர், கலாநிதி டேனியல் தியாகராஜா தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
யாழில், தற்போது குள்ள மனிதர்கள் தொடர்பிலான அச்சம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், ஆதவன் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட நேர்க்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதிகளில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுவது பொய் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.