யாழில் வாள்வெட்டு தாக்குதல்: இருவர் படுகாயம்

மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மிருசுவில் பகுதியை சேர்ந்த தம்பு ஜெயானந்தன் (வயது – 57) மற்றும் நமசிவாயம் மகேந்திரன் (வயது – 58) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு காரொன்றில் சென்ற குழுவினர், வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்யும் வரை மானிப்பாய், கோப்பாய் மற்றும் சுன்னாகம் போன்ற பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சகல உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் நேற்று முன்தினம் முதல் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts