யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இரு துவிச்சக்கர வணடிகள் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த துவிச்சக்கர வண்டிகள் நேற்று நள்ளிரவு மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் தலா ஒவ்வொரு துவிச்சக்கர வண்டிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
துவிச்சக்கர வண்டிகளில் வந்தவர்கள் காதலர்களா என்பதோடு அவர்களுக்கு ஏதேனும் விபரீதங்கள் இடம்பெற்றிருக்குமா என்பது தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் ஏதேனும் பொருட்களை கடத்தி வந்தவர்கள் துவிச்சக்கர வண்டிகளை கைவிட்டுச்சென்றிருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
சாவகச்சேரியில் பற்றை ஒன்றுக்குள்ளிருந்தே குறித்த துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவிச்சக்கர வண்டிகளை காவல் துறையினர் கையகப்படுத்தியுள்ளதோடு காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.