கிராம அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு!!

கிராம அலுவலர் அலுவலகத்தை தாக்கியதுடன் அவரையும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதை கண்டித்தும், தமது பாதுகாப்பினை உறுதிப் படுத்துமாறு கோரியும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள் தமது அலுவலகங்களுக்குச் செல்லாது இன்று பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

தமது பாதுகாப்பானது உறுதிப்படுத்தப்படும் வரையில் பிரதேச செயலகத்தில் இருந்தே கடமைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வண்ணார் பண்ணை ஜே/100 கிராம அலுவலர் அலுவலகத்துக்குள் நேற்றுப் பகல் நுழைந்த வாள்வெட்டுக்குழுவினர் வாள் முனையில் கிராம அலுவலரை அச்சுறுத்தியதுடன், அலுவலகத்தில் இருந்த மடிக்கணினி மற்றும் உபகரணங்களை உடைத்து கிராம அலுவலரின் கைப்பேசியையும் பறித்து உடைத்துவிட்டு வெளியே நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளி ஆகியவற்றையும் நொருக்கிவிட்டுச் சென்றனர். என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts