மன்னார் மடு திருத்தலத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்திருந்தார்.

இதன்போது அவர் அங்கு இடம் பெற்ற விசேட திருப்பலியிலும் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் உள்ளிட்ட பலரும் இந்த விசேட திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மடு திருத்தல திருவிழாவிற்கான முன்னேடுபாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
அத்துடன், திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை ஆலய நிர்வாகத்துடன் இணைந்து முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதேவேளை, ஜனாதிபதியின் மடுத்திருத்தலத்திற்கான விஜயத்தில், ஜனாதிபதியின் பாதிரியார் மற்றும் அவரது மகள் ஆகியோரும் இணைந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.