பெற்றோல் பௌசர் உரிமையாளர்கள் நாளை வேலைநிறுத்தம்!!

தனியார் பெற்றோல் பௌசர் உரிமையாளர்கள் நாளை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று பௌசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பெற்றோல் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பெற்றோல் விநியோகத்துக்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என்று வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

Related Posts