முதலாம் கட்டத்துக்கு முடிவில்லை – 2 ஆம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு பட்டதாரிகளுக்கு அழைப்பு

பட்டதாரி பயிலுனர்களை அரச சேவைகளில் இணைப்பதற்காக கடந்த ஏப்பிரல் மாதம் பட்டதாரிகளுக்கு நாடுமுழுவதும் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்விற் முடிவுகள் எதுவும் அறிவிக்காத நிலையில் 2 ஆம் கட்ட நேர்முகத் தேர்விற்கான பதிவு செய்தலுக்காக பிரதேச செயலகங்கள் ஊடாக அரசாங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சினால் கடந்த ஆண்டு முதற்கட்டமாக பட்டதாரி பயிலுனர்களை அரச சேவைகளில் இணைப்பதற்கான விணப்பங்கள் கோரப்பட்டு, நேர்முகத் தேர்வும் நடாத்தப்பட்டது.

அதனடிப்படையில் 20 ஆயிரம் பட்டதாரிகளை பயிற்சிக்காக உள்வாங்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. பின்னர் முதல்கட்டமாகா ஜூலையில் 5 ஆயிரம் பட்டதாரிகளையும் செப்ரெம்பரில் 15 ஆயிரம் பட்டதாரிகளையும் பயிற்சிக்கு உள்வாங்குவதாக அமைச்சரவைத் தீர்மானம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பயிற்சிக்கான நியமனங்களை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் விபரங்கள் கூட வெளியிடாது முதலாம் கட்டத்துக்கு தெரிவு செய்யப்படாதவர்கள் இரண்டாம் கட்டத்துக்கு விண்ணப்பியுங்கள் என்ற அறிவித்தலுடன் பிரதேச செயலகங்களில் பதிவுசெய்தல் தொடர்பான அறிவுறுத்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30.06.2018 ம் திகதியில் 45 வயதுக்குக் குறைந்த ஆனால், அதே திகதிக்கு முன் (30.06.2018 ) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்றுள்ள பட்டதாரிகள்.

உங்கள் நிரந்தர வதிவிடத்துக்கான பிரதேச செயலகத்தில் 19.06.2018 முதல் 2106.2018 வரையான காலப்பகுதிக்குள் உங்கள் அடையாள அட்டை மற்றும் உங்கள் பட்டச் சான்றிதழின் பிரதிகளைச் சமர்ப்பித்து உங்களுக்கான பதிவுகளை மேற்கெள்ளவேண்டும்.

இதன்போது இணைத்துகொள்ளப்படவுள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை 15000 ஆகும். ஆனால், அதற்கு மேலதிகமான அதேவளை, பதிவு செய்து நேர்முகப்பரீட்சைக்கு தோற்றும் ஏனைய பட்டதாரிகள் 2019 ஆம் ஆண்டில் மூன்றாம், நான்காம் கட்டங்களில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதால் தயவு செய்து தகுதியான அனைவரும் பதிவு செய்து, நேர்முகப்பரீட்சையை எதிர்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related Posts