நோர்வே வெளிவிவகார அமைச்சர் ரோலிட்ச் ஹொல்டே உட்பட குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடையங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாவில்லை. மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.