நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய கடற்படை

பருத்தித்துறை கடற்பிரதேசத்தில் வழித்தவறி தத்தளித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த மீனவர்கள் கடலில் தளித்தளித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் அடுத்து 26 மைல்களுக்கு அப்பால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related Posts