சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்!!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து இருதய சிகிச்சைப் பிரிவுக்கு நேற்று இரவு 7 மணியளவில் மாற்றப்பட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு, பொது மருத்துவ வல்லுநர் பேரானந்தராஜா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை வழங்கினர்.

உயர் குருதி அழுத்தம் காரணமாகவே அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது” என்று மருத்துவர்கள் முன்னர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவசர சிகிச்சையின் பின்னர் அவர், இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

“நெஞ்சு வலி காரணமாக சுவாசிப்பதில் அவருக்கு உள்ள பாதிப்பு காரணமாகவே சிவாஜிலிங்கம் இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருதய சிகிச்சை வல்லுநர் சாணிய கருணாரட்ண தலைமையிலான மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சையளிக்கின்றனர்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Posts