அரைச் சொகுசு பேருந்து சேவைகளுக்கு வழங்கப்படும் வழித்தட அனுமதிப் பத்திரம் இந்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை அடுத்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்ப்பாணம் – கொழும்பு, வவுனியா – கொழும்பு பேருந்து சேவையில் அரைச் சொகுசு பேருந்துகளே அதிகம் சேவையில் ஈடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.