இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் வாகன உரிமையாளர்கள் சங்கம் பணிபுறக்கணிப்பு?

எரிபொருள் விலையை அதிகரித்தமையினால் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் வாகன உரிமையாளர்கள் சங்கம் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

முன்வைக்கப்பட்ட மூன்று வேண்டுகோள்களுக்கும், இதுவரையில் உரிய முறையில் பதில் கிடைக்காமையின் காரணமாகவே பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக எரிபொருள் விநியோக தனியார் பவுசர் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்

இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இவ்வாறு பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts