யாழ்.குடாநாட்டில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடியுடன் கூடிய மழையின் போது, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் நுழைவாயிற் கோபுரத்தின் ஜாலிகள் மின்னல் தாக்கத்தால் சேதமடைந்தன.
கோபுரத்தின் வர்ணப்பூச்சு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்க கோபுர கலசங்களில் வரகு தானியம் இடப்படுகின்றன. எனினும் நகுலேஸ்வரம் ஆலய கோபுரத்தின் சீரமைப்பு பணிகள் இடம்பெறுவதால் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அதனாலே மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணனி ஆய்வு கூட மின்மானி மின்னல் தாக்கத்தால் தீப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.