யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீ பற்றி எரிந்த நிலையில் யாழ். மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் யாழ் நகரில் கடும் இடி மின்னலுடன் மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் பாரிய வெளிச்சத்துடன் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று பற்றி எரிந்தது. இதனையடுத்து யாழ்.மாநகரசபைக்கு வழங்கிய தகவலை அடுத்து தீயணைப்பு பிரிவுடன் சிலர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும் இந்த மின்னல் தாக்கத்தில் உயிர் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.