வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது,
வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் உள்ள சுதர்ஷன் என்பவர் நேற்று முன்தினம்(09.05.2018) காலை தனது ஐந்து வயது மகளான ருஷா என்பவரை முன்பள்ளி பாடசாலைக்கு தனது கயஸ் ரக வாகனத்தில் ஏற்றி சென்று இறக்கிய பொழுது தனது வாகனத்தை முன்நோக்கி நகர்த்தியுள்ளார்.
அதன் பொழுது சிறுமி வாகனத்தின் முன்பக்கமாக கடப்பதை அவதானிக்காத தந்தை சிறுமி மீது வாகனத்தை மோதியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி எதிர்வரும் 23.05.2018 அன்று தனது ஐந்தாவது பிறந்த தினத்தை கொண்டாட இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.