வடக்கு, கிழக்கு பகுதிகளில் விகாரை அமைக்க தடை? – சுமந்திரன்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் விகாரை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்ததாக சிங்கள நாள் இதழ் ஒன்றில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் குறிப்பிட்ட சிங்கள நாள் இதழ் வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறானது என்றும் இதன் மூலம் பெளத்த சமூகத்தை கோபப்படுத்துவதற்கான முயற்சியாக அது அமைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனால் தவறான தகவலை பிரசுரித்ததனால் குறிப்பிட்ட நாள் இதழ்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறிப்பிட்ட செய்தி தொடர்பில் தற்போது பல எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts