Ad Widget

அனந்தி சசி­த­ரன் மற்றும் சிவ­க­ரன் கட்­சி­யிலிருந்து நீக்கப்படுகின்றனர்?

இலங்கைத் தமிழர­சுக் கட்­சி­யில் இருந்து வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் கட்சியின் இளை­ஞர் அணி­யின் முன்னாள் செய­லர் சிவ­க­ரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படவேண்டுமென கட்­சி­யின் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் ஏக­ம­ன­தாக முடி­வெ­டுக்­கப்­பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழர­சுக் கட்­சி­யின் செயற்­கு­ழுக் கூட்­டம் கொழும்­பில் நடை­பெற்­றபோது திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் சிவ­க­ரன் இரு­வர்மீதும் ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை எடுக்கப்படவேண்டுமென முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்­த­லில், மைத்­தி­ரி­பால சிரிசே­னவை ஆத­ரிப்­பது என கட்சி தீர்­மா­னம் எடுத்த பின்­னர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் சிவ­க­ரன் ஆகிய இருவரும் கட்சியின் தீர்மானத் தினை மீறியமையினால் இருவர்மீதும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

அதற்கமைய திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் சிவ­க­ரன் ஆகியோரை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வது என்று ஏக­ம­ன­தாக முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

Related Posts