Ad Widget

விகடனில் 2012 இல் வெளியான பேட்டி பெண்போராளிகளை தவறாக பொதுமைப்படுத்தி சித்தரித்தமைக்கு மன்னிப்புக்கோருகின்றேன் -அருளினியன்

2012 ம் ஆண்டு ஆனந்த விகடனில் அநாமதேயமான  முன்னாள் போராளி ஒருவரின்   பேட்டி வெளியாகியிருந்தது அப்பேட்டியில் முன்னாள் போராளி ஒருவர் தான்பல்வேறு கொடுமைகளை சந்தித்து பாலியல் கொடுமைகளுக்கு உள்ளகிய நிலையில் வேறுவழியின்றி தற்போது  பாலியல் தொழில் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் கூறியதாக வெளியாகயிருந்தது. அந்த பேட்டியினை கண்டவர் ஈழத்து மாணவ பத்திரிகையாளரான அருளினியன் ஆவார். இப்பேட்டி ”முன்னாள் போராளி இந்நாள் பாலியல் தொழிலாளி” என்ற தலைப்பில் பிரசுரமாகியிருந்தது. அது முன்னால் பெண்போராளிகளை கேவலப்படுத்துவதாக அமைந்து விட்டதாக பெரும் சச்சரவு எழுந்திருந்தது அதற்கு விகடன் அப்போது தன்னிலை விளக்கம் வழங்கியிருந்தது.

இந்நிலையில் அப்போதைய மாணவபத்திரிகையாளனும் தற்போது வேறு இந்திய ஊடகத்தில் பணியாற்றுபவருமான அருளினியன் யாழ்ப்பாணத்தில் தன்னுடைய கேரளத்து பயணக்கட்டுரை நுாலான ”கேரள டயரீஸ்” என்ற நுாலை நாளை 3ம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிட உள்ளார் அதற்கு பெரும் எதிர்ப்பு சமூகவலைத்தளத்தில் தெரிவி்க்கப்பட்டது. இந்நிலையில் அருளினியன் மற்றும் நுால் வெளியீட்டு ஏற்பாட்டாளர்கள் இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் தோன்றினர்.

காணொளி நன்றி: குளொபல்தமிழ் இணையம்

ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தன்னுடைய 22 வயதில் மாணவ பத்திரிகையாளனாக இருந்த வேளை விகடன் ஆசிரியர் பீடத்தின் அறிவுறுத்தலில் தன்னால் தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட பேட்டியில் தெரிவிக்கபட்டிருந்த கருத்துக்கள் பெண்போராளிகள் அனைவரையும் பொதுமைப்படுத்தும் விதமாக அமைந்து விட்டமைக்காக வருந்துவதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த பேட்டிக்கான தலைப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அது சஞ்சிகை ஆசிரியரால் தனக்கு தெரியாமல் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன் அந்தபேட்டிக்கு வரையப்பட்ட ஓவியம் கூட தவறான தொன்று என்றும் குறிப்பிட்டார். இது பற்றி தான் மறுப்பறிக்கை வெளியிட இருந்த வேளையில் விகடன் ஆசிரியர் பீடத்தினால் தடுக்கப்பட்டதாகவும் அதை தாங்களே சரியான வகையில் எதிர்கொள்வதாக விகடன் ஆசிரியர் பீடம் தெரிவித்ததால் மாணவபத்திரிகையாளனான தன்னால் அப்போது எதுவும் செய்ய முடிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார்

ஒருவருடம் பணிக்காலம் முடிந்தபின் வெளியில் வந்தபின்னராவது மன்னிப்பு கேட்டிருக்கலாமே என உடகவிலாளர் கேட்ட கேள்விக்கு அப்படி செய்து மீண்டும் அந்தபிரச்சனையினை கிளற விரும்பிருக்கவில்லை என்றும் அதனால் மீண்டும் பெண்போராளிகளின் மனம் புண்படியாகிவிடும் என தான் கருதியதாகவும் தெரிவித்தார். அவ்வேளையில் தான் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தமையால் மன அழுத்தத்திற்குள்ளாகியிருந்தாகவும் இன்றும் அதற்காக வருந்துவதாகவும் குறிப்பிட்டார்.

தனக்கு பேட்டி எடுக்க அறிவுறுத்தப்பட்ட வேளை தொலைபேசி அழைப்பின் ”மூலம்” அதன் உண்மைத்தன்மை குறித்து தான் தெரிந்திருக்கவில்லை என்றும் அதை வழமைபோல ஆசிரியபீடம் உறுதிப்படுத்தியே தந்திருக்கும் என்பதால் தான் அதுபற்றி ஆராய்ந்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்

தற்போதைய நிலையில் அவ்வாறனைதொரு பேட்டி எடுக்குமாறு கேட்டால் நிச்சயம் தான் எடுக்கமாட்டேன் என்றும் தெரிவித்தார்.மீண்டும் ஒரு தவறை இழைக்கமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் தனது கேரளப்பயணங்கள் குறித்த நுாலான கேரள டயறீசில் ஏதாவது விமர்சனங்கள் இருப்பின் அது பற்றி புத்தகத்தை வாசித்துவிட்டு தன்னிடம் நேரடியாக கேட்கமுடியும் விமர்சனம் செய்யமுடியும் என்றும் புத்தகவெளியீடு நாளை யாழ்ப்பாணத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவித்த்தார்

ஏற்பாட்டாளர்கள் சார்பில் கருத்து தெரிவித்த சோபீஸன் இளவயதில் அருளினியன் அறியாமல் உடந்தையாகிருந்த தவறுக்கு மன்னிப்புக்கு கேட்டுள்ள நிலையில் இந்த புதிய புத்தகம் குறித்து புத்தகத்தை வாசித்து விமர்சனைங்களை தாராளமாக முன்வைக்கலாம் என்றும் அதுவே ஜனநாயகமாகவும் கருத்துச்சுதந்திரம் கொண்டதாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார். அதற்காக ஒரு படைப்பினை தடுப்பத சரியல்ல என்றும் அது தேவையான படைப்பா என்பது காலத்தால் மக்கள் முன் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.தனக்கும் இந்த வெளியீட்டில் விமர்சனங்கள் இருக்கின்றபோதிலும் கருத்து சுதந்திரத்தை மதிப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிந்திக்கிடைத்த தகவல்களின்படி குறித்த கேரள டயறீஸ்  புத்தகவெளியீடு யாழ் இந்துக்கல்லுாரியில் இடம்பெற மாட்டாது எனவும் பிறிதொரு இடத்தில் ஏற்பாடு சேய்யப்படுவதாகவுமும் தெரியவருக்கின்றது

Related Posts